புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது?

புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை முற்பகல் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் மாத்திரமே உள்ளடங்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அமைச்சரவையில் தற்போதுள்ள பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், தினேஸ் குணவர்தன, அலி சப்ரி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கு மேலதிகமாக ரமேஸ் பத்திரன, திலும் அமுனுகம, செஹான் சேமசிங்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.