பிலிப்பைன்ஸில் நில அதிர்வு!

மத்திய பிலிப்பைன்ஸின் லெய்ட் பகுதியில் 6.0 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.16 மணியளவில் பிலிப்பைன்ஸின் டுலாக் நகருக்கு தென்கிழக்கே சுமார் 32 கிலோமீற்றர் தொலைவில்இ 8 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் லெய்ட் மாகாணத்தின் சில பகுதிகளில் குறித்த நில அதிர்வானது வலுவாக உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.