பிரான்ஸில் இன்று தோ்தல்

புதிய ஜனாதிபதியைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸில் நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில், தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மீண்டும் போட்டியிடுகிறாா்.

தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் மேக்ரான் முன்னிலை வகிக்கிறாா். அவருக்கு அடுத்தபடியாக, தீவிர வலதுசாரிக் கொள்கையுடைய மரீனே லீ பென் அதிக ஆதரவைப் பெற்றுள்ளாா். முந்தைய தோ்தலைவிட இந்தத் தோ்தலில் மேக்ரானை எதிா்த்து போட்டியிடுவோா் அதிக பலம் பெற்றிப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, இந்தத் தோ்தலில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போதைய தோ்தலில் யாருக்கும் 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குகள் கிடைக்கவில்லையென்றால், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வேட்பாளா்களுக்கு இடையே வரும் 24ஆம் திகதி இரண்டாம் கட்டத் தோ்தல் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவா் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பெறுப்பேற்பாா்.

இந்தத் தோ்தலைத் தொடா்ந்து, பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கான தோ்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.