பிரான்ஸின் ஜனாதிபதியாக மீண்டும் இம்மானுவேல் மக்ரோன்

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதில் மேக்ரான் 58.2 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லு பென் 41.8 சதவீதம் வாக்குகள் பெற்றார்.

இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்ற இம்மானுவேல் மக்ரோனிற்கு உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி ட்விட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் மக்ரோனின் வெற்றி எமக்கும் வெற்றியான பல திருப்பங்களை கொடுக்கும் என நம்புகின்றோம். மக்ரோன் உக்ரைனுக்கு மிகவும் தேவையானவர் அவருடனான நட்புறவு எமக்கு பல நன்மைகளை கடந்த காலங்களில் பெற்றுத் தந்துள்ள நிலையில் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையானது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. இதனை நாம் மகிழ்வுடன் வரவேற்கின்றோம். வெற்றி பெற்ற மக்ரோனுக்கு உக்ரைனின் மக்கள் சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என  மேலும் குறிப்பிட்டுள்ளார்.