பிரான்சில் வரலாறு காணாத பனிப்பொழிவு
பிரான்சில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதனால் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பிரான்சின் பல நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு இலட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பு கருதி பல தொடருந்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்சில் வரும் வாரங்களில் அதிகளவில் பனிப்பொழிவு இருக்கும் என்றும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.