பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கடந்த வாரம் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நாடு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி அறிக்கை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி, இன்று இரவு பிரதமர் இந்த விசேட அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.