பிணையில் விடுவித்த மாணவனை மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவு

ரம்புக்கன விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 18 வயதான பாடசாலை மாணவன், பிணையில் விடுவிக்கப்படட மாணவன் மீதான விசாரணை மீண்டும் எதிர்வரும் 28ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரான மாணவன், நேற்று வியாழக்கிழமை இரவு 10.40க்கு கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை, சட்டத்துக்கு முரணாக ஒன்றுகூடியமை உள்ளிட்ட இன்னும் பல குற்றச்சாட்டுகள் அந்த மாணவன் மீது சுமத்தப்பட்டுள்ளது.

கேகாலை நீதவான் வசந்த நவரட்னவின் உத்தரவின் பேரில், கேகாலை நீதவான் வைத்திய அதிகாரியின் முன்னிலையில் சந்தேகநபரான மாணவன் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.