பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன காலமானார்

பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன இன்று வியாழக்கிழமை காலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்.எல்.பி.பி) பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன தனது 69 ஆவது வயதில் இவ்வாறு காலமாகியுள்ளார்.

சுகவீனமுற்றிருந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அஅவரது குடும்ப வட்டாரங்கள் இன்று உறுதி செய்துள்ளனர்.