பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி பூர்த்தி

பாடசாலைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது பூரணமடைந்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

பாடநூல்களை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அடுத்த மாதம் நடுப்பகுதியின் போது மின்சார நெருக்கடியை இயலுமான அளவு தீர்க்க முடியுமென்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மின்சார நெருக்கடியினால் பாதிப்படைவார்கள் என்று எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் அடுத்த மாதத்தை அண்மிக்கும் போது தினமும் இரண்டு மணி நேரம் மாத்திரம் மின் துண்டிப்பு இடம் பெறலாமென்றும் கூறினார்.