பாடசாலை மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

பாடசாலை மாணவி மீது இன்று புதன்கிழமை காலை மோட்டார் சைக்கிள் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோட்டார் சைக்கிளின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மடிதியவெல ஆரம்ப பாடசாலைக்கு அருகில் வீதியைக் கடக்க முற்பட்ட 8 வயதுடைய பாடசாலை மாணவி மீதி மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது .

காயமடைந்த மாணவி சிகிச்சைக்காக மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மோட்டார் சைக்கிள் சாரதியைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொட்டதெனியவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.