பாடசாலை போக்குவரத்து சேவை இனி இல்லை ?
எரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வுகாணாவிட்டால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் இருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு ஆதரவும் கிடைக்காவிட்டாலும், பரீட்சை மற்றும் கல்விசார் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.எம்.கே ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமைக்குள் சாதகமான தீர்வு வழங்கப்படாவிட்டால், தமது சேவைகளில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் எச்சரித்துள்ளார்.