பல அரச கட்டடங்கள் ரணசிங்க பிரேமதாசவின் காலத்திலேயே உருவாக்கப்பட்டன

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான விசும்பாய முதலீட்டு தொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான விசும்பாயவை முதலீட்டுக்காக வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இதன் மதிப்பு 8 பில்லியன் ரூபா. 8 பில்லியன் மதிப்புள்ள விசும்பாயவை இப்போது 4 பில்லியனுக்கு விற்க முயற்சிக்கிறது.

மதிப்பீட்டை பொருட்படுத்தாமல் குறைந்த விலையில் பங்குகளை விற்க தனித் தரகர்கள் குழு முயற்சிக்கிறது.

செத்சிறிபாய, சுவசிறிபாய, சவ்சிறிபாய, இசுருபாய போன்ற அரச கட்டடங்கள் ரணசிங்க பிரேமதாசவின் காலத்திலேயே உருவாக்கப்பட்டன. இதை விற்பனை செய்வதிலிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் நேற்று சனிக்கிழமை பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.