பரீட்சைகள் தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவித்தல்

 

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகளை 2024 மே மாத தொடக்கத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை இவ்வருடம் மே மாத நடுப்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கான கால அட்டவணை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.