பதுக்கி வைத்து டீசல் விற்ற ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டார எலிய பகுதியில் டீசல் விற்பனை செய்த 45 வயதுடைய நபர் ஒருவரை விஷேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 80 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டதோடு, குறித்த சந்தேக நபரையும் டீசலையும் ஹப்புத்தளை பொலிஸாரிடம் அதிரடிப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.