பதவியிலிருந்து விலகப்போவதில்லை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
ஜனாதிபதி பதவியில் இருந்து விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரச உயர் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக தான் செயற்படுவதாக மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.