பட்டிருப்பில் ஆசிரியர்களும், கல்வி அதிகாரிகளும் ஏட்டிற்குப் போட்டியாக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் நேற்று திங்கட்கிழமை பாடசாலை முடிவுற்ற பின்னர் பாடசாலை முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது இவ்வாறு இருக்க பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தைக் கண்டித்தும் அவர்களுக்கு எதிராக பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக வலயக்கல்விப் பணிப்பாளர், மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகள், உத்தியோகஸ்த்தர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.