பங்களாதேஷ் – இலங்கை முதலாவது ஒருநாள் போட்டி இன்று

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கவுள்ள 16 பேர் அடங்கிய இலங்கை குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது.

குசல் மெண்டிஸ் தலைமையிலான இந்த குழாமுக்கு சரித் அசலங்க உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியுடனான தொடரின்போது உபாதைக்கு உள்ளான பெத்தும் நிஸ்ஸங்கவும் இன்றைய போட்டியில் விளையாடவுள்ளார்.