பகல் வேளையில் வீட்டை உடைத்து நகை திருட்டு : திருடியவர் கைது

-யாழ் நிருபர்-

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் பகல் வேளையில் வீட்டை உடைத்து 7 பவுண் தங்க நகை திருடிய சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

நிலையில் குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் இன்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது திருடப்பட்ட நகையும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.