நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த கேரள கஞ்சா பொதிகள்

-யாழ் நிருபர்-

இன்று அதிகாலை 3 மணியளவில் நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோ எடையுள்ள கேரள கஞ்சா பொதிகள் நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டது.

நெடுந்தீவு கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த கஞ்சா பொதிகள் எவ்வாறு மிதந்து வந்தன என்ற விசாரணை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.