நுவரெலியாவில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல்

-நுவரெலியா நிருபர்-

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வு மலையகத்தில் பல இடங்களிலும் இடம்பெற்றது.

அந்தவகையில், நுவரெலியாவில் புனித சவேரியார் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி விசேட ஆராதனைகள் இடம்பெற்றது.

இதனையடுத்து, ஆலய வளாகத்தில் அருட்தந்தை சுகத் ரோகன தலைமையில் காலை 8.45 மணிக்கு ஆலய மணி ஓசை எழுப்பப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு, தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதி வேண்டும் என கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர்.

இதன்போது எதிர்ப்பு வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் தமது எதிர்பை வெளியிட்டனர்.