நுகேகொடையில் நிறுவனமொன்றின் கணக்காளர் மீது தாக்குதல்

நுகேகொடை, நாவல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த குழு நடத்திய தாக்குதலில் பெண் காயமடைந்துள்ளார்.

நாவல பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணே இதன் போது காயமடைந்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த கணக்காளர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நிறுவனத்தில் ஏற்பட்ட உள்முரண்பாடே தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.