நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்ற சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நீராடச் சென்று நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்ற சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அவிசாவளை – தெஹியோவிட்ட, சீதாவக்க ஆற்றின் யோகம பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

யாத்திரை குழுவொன்றைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்குழுவைச் சேர்ந்த பெண்ணொருவர் நீராடச் சென்றிருந்த வேளையில் நீரில் மூழ்கியுள்ளார்.

அவரை காப்பாற்ற முற்பட்ட போதே இவ்விருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் ராஜகிரிய மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இதேவேளை நீரில் மூழ்கிய பெண் பிரதேசவாசிகளால் உயிருடன் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.