நிலக்கடலையின் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

தோப்பூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கடலை செய்கையின் அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் விளைச்சல் சிறப்பாக காணப்பட்டாலும் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மொத்த வியாபாரிகள் ஒரு கொத்து நிலக்கடலை 110 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதாகவும் கடந்த முறை 150 ரூபாவிற்கு விற்பனை செய்ததாகவும் உற்பத்தியாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேச கச்சான் உற்பத்தியாளர்களுக்கான விதையினை கமநல சேவை நிலையத்தினூடாக மானிய அடிப்படையில் பெற்றுத்தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.