நியூயோர்க் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

நியூயோர்க்கில் உள்ள சுரங்க தொடருந்து நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சந்தேக நபர் முதலில் இரண்டு புகை குண்டுகளை வீசி, பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மேலும், அங்கிருந்து வெளியேற முற்பட்ட போது நெரிசலில் சிக்கியும், நச்சு புகையை சுவாசித்தமையினாலும் பாதிக்கப்பட்ட பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

எனினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.