நிந்தவூர் பிரதான வீதியில் விபத்து : சிறுமி உட்பட நால்வர் பலத்த காயம்

-கல்முனை நிருபர்-

அம்பாறை, நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் திங்கட்கிழமை இரவு 10.20 மணி அளவில் எரிபொருள் தாங்கி (பவுசர்) ஒன்றுடன் ஆட்டோ ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.

அக்கரைப்பற்றில் இருந்து சம்மாந்துறை நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோவுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்று கொண்டிருந்த  எரிபொருள் தாங்கி (பவுசர்) ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இதன்போது ஆட்டோ பலத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளதுடன், ஆட்டோவில் பயணித்த சிறுமி உட்பட நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.