நாளை வருகிறார் ஜெயசங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

நாளை 28முதல் 30ஆம் திகதிகளில் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் அமையவுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இந்த விஜயத்தின்போது, 29ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் BIMSTEC அமைச்சர்கள் மட்ட கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார் அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இலங்கை பயணத்தின்போது மேற்கொள்ளும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், இலங்கை இந்தியாவிடம் எதிர்பார்க்கும் முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை விஜயத்துக்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.