நாய்க்கு தீ வைத்து கொலை செய்த நபர் கைது

கம்பஹா – இம்புல்கொட பகுதியில் வளர்ப்பு நாய்க்கு தீ வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்புல்கொட பகுதியில் உள்ள வீட்டில் வளர்க்கப்பட்ட குறித்த நாய்க்கு அயல் வீட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தீ வைத்துள்ளார். அதில் பலத்த காயமடைந்த குறித்த நாய், கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

தீ வைத்துக் கொல்லப்பட்ட நாயின் உரிமையாளர் சம்பவம் தொடர்பில் யக்கல பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.