நாமல் ராஜபக்ச மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களின் கலந்துரையாடலும் மக்கள் சந்திப்பும் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் தனியார் விடுதியில் இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார்.

இதில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்