நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 40,000 மெட்ரிக் டன் அரிசி

இந்த வார இறுதியில் 40,000மெட்ரிக் டன் அரிசியின் முதல் தொகுதி நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய கடன் வசதி எல்லையின் கீழ், இறக்குமதி செய்யப்படும் குறித்த அரிசி  உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ள விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி,பச்சை அரிசி என்பன  ஒரு கிலோகிராம்  110 ரூபாவுக்கும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.