நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை நீடிக்கும்

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக மழைக்காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில்  4 வான்கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகளும், திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.