நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவுகிறது புலம்பெயர் தமிழர் அமைப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான அந்நிய செலாவணியை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும், இதற்கான சட்டஏற்பாடுகளை நாடாளுமன்றில் நிறைவேற்றுமாறும் உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைபு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமென அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரவை உட்பட ஆறு அமைப்புகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 316 பேர் மீதான தடை சமீபத்தில் நீக்கப்பட்டது.

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டை கருத்திற்கொண்டு தடை நீக்கப்பட்டதாக தாம் நம்புவதாக, உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க