நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்யுமாறு அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
செல்லுபடியாகும் சாரதி உரிமம் இல்லாமல் மோட்டார் வாகனத்தைச் செலுத்தி போக்குவரத்து அதிகாரிகளின் கடமையைத் தடுத்ததாகவும், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தி அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.