நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் விபத்து

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் உழவு இயந்திரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 15 ஆவது மைல்கல் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்தின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் உழவு இயந்திரத்தை செலுத்திச் சென்ற நபர் காயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனத்தில் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.