நவராத்திரி

 

நவராத்திரி நோன்பு புரட்டாசிமாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தி தேவியை குறித்து நோற்கப்படும் நோன்பாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.

இந்த நோன்பு நாள்களில், தேவி மகாத்மியம், அபிராமி அந்தாதி, துர்க்கா அஷ்டகம், இலட்சுமி தோத்திரம், சகலகலாவல்லி மாலை, சரஸ்வதி அந்தாதி, மஹிஷாசுரமர்த்தினி தோத்திரம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாடல்களை ஓதலாம்.