தோட்டத்தில் புதைக்கப்பட்ட 6 மாத சிசுவின் சடலம் மீட்பு

வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் தோட்டத்தில் புதைக்கப்பட்ட 6 மாத சிசுவின் சடலம் நீதிமன்ற உத்தரவுக்கமைய பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

சிசுவின் சடலமானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்  விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும்  ஆண் ஒருவரும் பெண்ணும் தோட்டத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.