தொடர்குடியிருப்பில் தீ : இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து நாசம்
-பதுளை நிருபர்-
நமுனுகுல கனவரல்ல CVE டிவிஷனில் 6 ம் இலக்க பதினொரு வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் மூன்றாவது வீடு இன்று காலை 7.40 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதன்போது குறித்த தொடர் குடியிருப்பில் இருந்த 2 வீடுகள் முற்றாக தீக்கிரையானதுடன் பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன.
இவ்விபத்தில் எவருக்கும் உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை.
அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் அறுவர் வசித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.