
தேசிய மட்ட ஜுடோ போட்டியில் களமிறங்கும் மட்டக்களப்பு வீரர்கள்
கிழக்குமாகாண ஜுடோ போட்டிகள் கடந்த வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் திருகோணமலை மக்கேசர் உள்ளக விளையாட்டு அரங்கில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவானவர்களுக்கான ஜுடோ போட்டிகள் கிழக்குமாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இப்போட்டியில் மட்டக்களப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய வீர, வீராங்கனைகள் இருவரும் உள்ளடங்கலாக 6 தங்கப்பதக்கங்கள், 6 வெள்ளி பதக்கங்கள், 6 வெண்கலப் பதக்கங்களை பெற்றுக் கொண்டனர்.
இதற்கு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு துறை உத்தியோகஸ்தர் வி.ஈஸ்வரன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவின் விளையாட்டு உத்தியோகஸ்தர் சிவகுமார் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட. ஜுடோ பயிற்றுவிப்பாளர் சுப்ரமணியம் திவாகரனின் பயிற்றுவிப்பில் வெற்றியைப் பெற்றுக் கொண்டனர்.
மேலும், நடைபெறவிருக்கும் தேசிய மட்ட ஜுடோ போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 12 வீர வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடதக்கது.