தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலை மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பெற்றோரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரொருவர் பாடசாலைக்கும் பாடசாலை அதிபருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக செயல்பட்டதாக தெரிவித்தே பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் சங்கமொன்றினை பயன்படுத்தி தமது சொந்த நலனை அடிப்படையாக கொண்டு பாடசாலைக்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ந்தும் செய்வதாக குற்றம் சாட்டிய பெற்றோர் குறித்த ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கவேண்டும் என தெரிவித்தனர்.

சில வாரங்களுக்கு முன்பு குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.