துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்

புத்தளத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல்  இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஆணைமடு பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

ஆணைமடு பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் ஆணைமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்தியவர் தப்பிச் சென்றுள்ளதுடன், தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.