திருகோணமலை கண்டி பிரதான வீதி போக்குவரத்து தடை

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை ஒரு சில மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது நிலவி வரும் சீரற்ற காலை நிலை காரணமாக திருகோணமலை கண்டி பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று நேற்று புதன் கிழமை மாலை முறிந்து விழுந்ததையடுத்து போக்குவரத்து தாமதமடைந்துள்ளது.

இதனை அடுத்து தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய வீதி அபிவிருத்தி அதிகார சபை, தம்பலகாமம் பொலிஸார், இராணுவத்தினர்கள் இணைந்து குறித்த மரத்தை அப்புறப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.