திருகோணமலையில் ஆறு மீனவர்கள் கைது

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை- சமுத்ராகம பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மனையாவெளி பகுதியைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து, குறித்த ஆறு பேரையும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மனையாவெளியைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் கரவலை இழுத்துக் கொண்டிருந்த போது, சமுத்ராகம பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் வருகை தந்து, வலையை வெட்டி, பிடித்த மீன்களை எடுத்துச் சென்றுள்ளதாக துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளர்.

இதனையடுத்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை கைது செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்டு, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்