தினேஸ் குணவர்த்தனவை பிரதமராக நியமிக்க யோசனை

ஆளுங்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராகவும் சபை முதல்வராகவும் தினேஸ் குணவர்தன செயற்பட்டு வரும் தினேஸ் குணவர்த்தனவை பிரதமராக நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினால், அப்பதவிக்கு தினேஸ் குணவர்தனவை நியமிப்பதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, தினேஸ் குணவர்தன புதிய பிரதமராக பதவியேற்றால் அவருக்கு வேறு எந்த அமைச்சுப் பதவியையும் வழங்காதிருக்கவும் பேச்சுவாரத்தைகள் இடம்பெற்றுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.