திட்டமிட்டபடி மே மாதம் சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும்

கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரபத்திர சாதாரண தர பரீட்சைகள் திட்டமிட்டபடி மே மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

2022ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்களில் 38 மில்லியனுக்கும் அதிகமானவை அச்சிடப்பட்டு பிரதான களஞ் சியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும்போது முழுமையாக பாடப் புத்தகங்கள் வழங்கும் பணிகள் நிறைவடையும் எனவும் அவர் கூறினார்.