தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ள காற்று நகர ஆரம்பித்துள்ளது

தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ள காற்று அம்பாறைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவில் வடக்கு – வடமேற்கு திசையை நோக்கி தனது நகர்வை ஆரம்பித்திருக்கிறது.

இதே வேகத்தில் நகரும்போது இன்றிரவுக்குள் திருகோணமலைக்கு கிழக்கே 150கிமீ தொலைவு என்ற அளவில் நெருங்கிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கிழக்கில் தற்போது பரவலாக கனமழை பெய்யத்தொடங்கியுள்ள நிலையில்இ வடக்கிலும் அடுத்துவரும் 36 மணிநேரங்களில் எந்நேரமும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென எதிர்வுகூறப்படுகிறது.