தம்பலகாமம் பிரதேச செயலக 4ம் காலாண்டுக்கான பிரதேச கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம்

-கிண்ணியா நிருபர்-

தம்பலகாமம் பிரதேச செயலக 2023ம் ஆண்டின் 4ம் காலாண்டுக்கான பிரதேச கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

இதில் வெளிக்கள உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்ட பல விடயங்கள் களவிஜயம் வேலைத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தன.

இதில் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எல்.மஹ்ரூப் கலந்து கொண்டு கூட்டத்தை வழிநடாத்தினார்.

உதவி பிரதேச செயலாளர் இரா பிரசாந்தன்இநிருவாக உத்தியோகத்தர் உடகெதரஇகிளைத் தலைவர்கள்இவெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.