தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் புத்துயிர் பெற வேண்டும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் புத்துயிர் பெற வேண்டும்என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னாட்சி மாநிலத்தில் சுயநிர்ணயத்தை ஆதரித்தது தமிழர் தேசத்துக்கான அங்கீகாரத்தை அடைவதற்கு 2001 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த இலக்கை நோக்கி பயணிப்பதற்கு அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டமைப்பாகவே பயணிக்க வேண்டும்.

அவ்வாறு நாம் தமிழ்த் தேசிய வழியிலே கூட்டமைப்பாகவே பயணித்து ராஜதந்திர அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

மிக முக்கியமாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவீரர்களின் அளப்பரிய தியாகங்களையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள்ளாக மரணித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாமனிதர்களின் தியாகங்களையும் மனதில் நிறுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஒன்றிணைப்பதற்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என மேலும் வலியுறுத்துவதாக ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.