தமிழர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதி

திருகோணமலை மூதூர் பகுதியில் இளம் யுவதி அவரது கணவரால் நேற்று வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டுள்ளார்.

அல்லே நகர் தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மூதூரில் வீடொன்றில் நேற்று காலை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனைதொடர்ந்து விசாரணையை ஆரம்பித்த பொலிஸாருக்கு குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரே கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.