
தனியார் பேருந்துடன் வேன் மோதி விபத்து : 8 பெண்கள் உட்பட 12 பேர் காயம்!
-பதுளை நிருபர்-
கந்தகெட்டிய பொபிட்டிய வீதியில், இன்று திங்கட்கிழமை காலை தனியார் பேருந்து ஒன்றும், ஆடைத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் சென்ற வேன் ஒன்றும் மோதி, விபத்துக்குள்ளானதில் 8 பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக, கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கந்தகெட்டிய பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 7 பேர் மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், கந்தகெட்டிய வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த வீதியில் இரண்டு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்கள் வெவெதென்ன மற்றும் போபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.