தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் விருது வழங்கும் நிகழ்வு

-யாழ் நிருபர்-

பண்டத்தரிப்பு தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தலும் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன்போது ஊடக ஆசிரியர்கள், மூத்த ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இவ்வாறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இதன்போது, தெரிவு செய்யப்பட்ட 99 பயனாளிகளுக்கு தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் மூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா  பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில்,

முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கஜதீபன், வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெபனேசன், பிரதேச சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.