தங்க மொத்த விற்பனை நிலையத்திற்கு அருகில் தீ

கொழும்பு – புறக்கோட்டை தங்க மொத்த விற்பனை நிலையத்துக்கு (Gold Market) அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் அறியவராத நிலையில், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் சேத விபரங்களும் இதுவரை வெளியாகவில்லை.